சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை அதிகபட்சமாக ஏற்காட்டில் 79 மில்லி மீட்டர் மழை பதிவு


சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை அதிகபட்சமாக ஏற்காட்டில் 79 மில்லி மீட்டர் மழை பதிவு
x
தினத்தந்தி 14 May 2022 2:58 AM IST (Updated: 14 May 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 79 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம்,
விடிய, விடிய மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் அசானி புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது.
இந்த மழை விடிய, விடிய சாரல் மழையாக கொட்டி தீர்த்தது. மாநகரில் நேற்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.
ஏற்காட்டில் 79 மி.மீட்டர் மழை
இந்த மழையால் மாநகரில் கிச்சிப்பாளையம், நாராயணநகர், பச்சப்பட்டி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், 4 ரோடு உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றன. காலை 9 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டதுடனே காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் வெயிலின் அளவு 88.7 டிகிரியாக பதிவானது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஏற்காட்டில் 79 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காடையாம்பட்டி-70.4, மேட்டூர்-54.8, எடப்பாடி-33, சங்ககிரி-27.1, ஓமலூர்-27, ஆத்தூர்-22, கெங்கவல்லி-20, ஆனைமடுவு-18, சேலம்-17.9, தம்மம்பட்டி-17, பெத்தநாயக்கன்பாளையம்-17, வீரகனூர்-16, கரியகோவில்-11.


Related Tags :
Next Story