ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
மருதூர்குறிச்சி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
தக்கலை:
மருதூர்குறிச்சி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி ஊராட்சியில், வெள்ளிகோட்டில் இருந்து குழிக்கோடு செல்லும் சாலையில் திப்பிலிக்குளம் என்ற ஞாறகுழிகுளம் உள்ளது. இதன் கரையோரத்தில் அதே பகுதியை சேர்ந்த 2 கூலித்தொழிலாளிகள் கடந்த பல ஆண்டுகளாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்ததால் அந்த இடத்தை காலி செய்யுமாறு ஊராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்து தொடர்ந்து அந்த இடத்தில் வசித்து வந்தனர்.
இதையடுத்து தக்கலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று 2 வீடுகளையும் இடித்து அகற்றினர். இதையொட்டி சம்பவ இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story