அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; 80 மி.மீட்டர் மழை பெய்தது
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. 80 மி.மீட்டர் மழை பெய்தது.
அந்தியூர்
அந்தியூர் பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடியாக கணக்கிடப்படுகிறது. தற்போது பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 29 அடியாக அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் மட்டும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 80 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
Related Tags :
Next Story