கோவில் திருவிழாவில் பொலி காளை இழுத்து வரும் நிகழ்ச்சி
கோவில் திருவிழாவில் பொலி காளை இழுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. 11-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து படைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாதம்பாளையம் ரோடு வெள்ளைபாறை மேட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பொலி காளையை ஊர்வலமாக சத்தி மெயின் ரோடு, ராஜவீதி வழியாக மாரியம்மன் கோவில் திடலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. திடலை சென்றடைந்ததும், அங்குள்ள கம்பத்தை சுற்றி பொலி காளை இழுத்து வரப்பட்டது.
அவ்வாறு கம்பத்தை சுற்றி பொலி காளைகளை அழைத்து வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
Related Tags :
Next Story