கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனு
கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு
கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
கூலி உயர்வு
ஈரோடு மாவட்ட சுமை பணியாளர்கள் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு திரண்டு சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோடு சரக்கு போக்குவரத்து (குட்ஸ் டிரான்ஸ்போர்ட்) நிறுவனங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதற்கிடையில் கூலி உயர்வு வழங்கக்கோரி எங்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது ஈரோடு ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு கூலி உயர்வும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் சரக்கு போக்குவரத்து நிறுவனம் தரப்பில் கூலி உயர்வு குறித்து பேச முன்வரவில்லை.
பேச்சுவார்த்தை
மாறாக தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்கி விடுவோம் என மிரட்டும் வகையில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஈரோட்டில் கூலி உயர்வு கோரிக்கை வைத்து, பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டு கூலி உயர்வு கொடுத்து வந்த நடைமுறையை நீக்கிவிட்டு தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story