ஈரோட்டில் மழை நிரம்பி வழியும் சூரம்பட்டி அணைக்கட்டு; சேறும் சகதியுமாக மாறிய நேதாஜி காய்கறி மார்க்கெட்
ஈரோட்டில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. மேலும் நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
ஈரோடு
ஈரோட்டில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. மேலும் நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டிலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் காலையில் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது.
இதனால் பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
மழை அளவு
மேலும் நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக மாறியது. அதனால் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி - 83.2, வரட்டுப்பள்ளம்-80, அம்மாபேட்டை-41.6, பவானி - 19.6, மொடக்குறிச்சி - 18, கோபி - 18, கவுந்தப்பாடி - 16.6, பெருந்துறை - 15, எலந்தகுட்டை-14.2, குண்டேரிபள்ளம் - 13.2, கொடிவேரி - 13, சத்தியமங்கலம் - 12, ஈரோடு- 10, நம்பியூர் - 8, சென்னிமலை - 7.6, பவானிசாகர் - 6.4, கொடுமுடி - 4.2. மாவட்டத்தில் மொத்தம் 380.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story