தார்வார் சிறையில் ‘பிரியாணி’ சாப்பிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட பயங்கரவாதி


தார்வார் சிறையில் ‘பிரியாணி’ சாப்பிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட பயங்கரவாதி
x
தினத்தந்தி 14 May 2022 3:51 AM IST (Updated: 14 May 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

தார்வார் சிறையில் ‘பிரியாணி’ சாப்பிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட பயங்கரவாதி

தார்வார்: தமிழ்நாடு-கர்நாடகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை உள்பட நாடு முழுவதும் உள்ள அணைகளை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான முகமது பகாத் என்பவரை கடந்த 2006-ம் ஆண்டு மைசூரு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு முகமதுவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. 

இதன்பின்னர் அவர் மைசூருவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு(2021) முகமது பகாத் தார்வார் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்குகளை விரைவாக முடிக்க கூறியும், தனது நண்பர்கள் உள்ள பெங்களூரு சிறைக்கு தன்னை மாற்ற கோரியும் கடந்த 7 நாட்களாக முகமது பகாத் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் சிறை டாக்டர் கேட்டு கொண்டதன் பேரில் பிரியாணி சாப்பிட்டு முகமது பகாத் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.


Next Story