சேலம் கோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்


சேலம் கோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 4:01 AM IST (Updated: 14 May 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு: தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்,
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஹபீப் தெரு உள்ளது. இந்த தெருவை ஆக்கிரமித்து நேற்று முன்தினம் சில வியாபாரிகள் கடைகளை அமைக்க முயன்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அந்த பகுதி பொதுமக்கள் கடைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சிலர் கடைகளை அமைத்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரி பழனிசாமி தலைமையிலான அலுவலர்கள் தெருவை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
அப்போது வியாபாரிகள் சிலர் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரம் முன்பு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலர்கள் கடைகளை அகற்றும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வியாபாரிகளின் திடீர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story