திருவேற்காட்டில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு


திருவேற்காட்டில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு
x
தினத்தந்தி 14 May 2022 3:51 PM IST (Updated: 14 May 2022 3:51 PM IST)
t-max-icont-min-icon

திருவேற்காட்டில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பூந்தமல்லி,  

திருவேற்காட்டை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் (வயது 22) மற்றும் பரத்குமார் (20). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.

பின்னர் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் இருவருக்கும் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் இதுபற்றி திருவேற்காடு போலீசில் புகார் செய்தனர். அதில், ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், அந்த ஓட்டல் சிக்கன் பிரியாணி தரமற்று இருந்ததாகவும், எனவே ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story