திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா


திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 14 May 2022 4:31 PM IST (Updated: 14 May 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

சிவகிரி:

சிவகிரியில் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அருகே பழைய போலீஸ் நிலையம் முன்புள்ள மீனாட்சி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.

இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பழம், இளநீர், சந்தனம் போன்ற 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் சுவாமி -அம்பாளுக்கு நந்தி வாகனத்தில் அமர்ந்து புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
------------


Next Story