நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் அழியும் ஆபத்து
நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் ஆழியும் நிலையை தடுப்ப விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பனைக்குளம்,
நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் ஆழியும் நிலையை தடுப்ப விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தென்னை விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்த படியாக பிரதான தொழிலாக இருப்பது தென்னை விவ சாயம். மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 எக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதி தேங்காய்கள் பருப்பு சத்து நிறைந்தது என்பதால் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் பட்டுப் போய் பெருமளவில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வாடல் நோய், சொறி போன்ற நோய் தாக்குதல்களால் தென்னை மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் தேங்காய் விலை குறைந்து வருவதாலும், உரங்கள் மற்றும் மருந்துகளின் விலையேற்றத்தாலும் தென்னை விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கின்றனர்.
வெறிச்சோடியது
கடந்த ஆண்டு வெள்ளை ஈக்களின் தாக்கத்தால் தென்னை மரங்கள் காய்ப்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் இலை கருகல் போன்று ஒருவித நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் தென்னை ஓலைகளில் கருப்பு நிறத்தில் தூசி படிந்தது போன்றும், பட்டுப்போனவை போன்றும் காட்சி அளிக்கின்றன.
இதனால் தென்னை மரங்களுக்கு சூரிய ஒளியில் இருந்து பச்சையம் கிடைப்பதில் தடையாக உள்ளது. மேலும் மரங்கள் பொலிவிழந்து காய்ப்புத்திறன் முற்றிலும் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக தென்னை விவசாயிகள் வருமானமின்றி தவிப்பதோடு தென்னை மரங்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்து
இதே நிலை தொடரும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட் டத்தில் தென்னை விவசாயம் அடியோடு அழியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு தென்னை மரங்களை நேரில் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story