5 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி
தேனி உள்பட 5 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி வருகிற 26-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நடக்கிறது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
ஜமாபந்தி
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, போடி, தேனி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இது, அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி ஆண்டிப்பட்டி தாலுகாவில் 26-ந்தேதி கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 31-ந்தேதி புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் கிராமங்களுக்கும், 1-ந்தேதி மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிராமங்களுக்கும், 2-ந்தேதி கோத்தலூத்து, கொத்தப்பட்டி, ராஜதானி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி கிராமங்களுக்கும், 3-ந்தேதி கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை கிராமங்களுக்கும் கலெக்டர் முரளிதரன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
தேனி தாலுகாவில் 26-ந்தேதி ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 31-ந்தேதி கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 1-ந்தேதி பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
பெரியகுளம், போடி
பெரியகுளம் தாலுகாவில் 26-ந்தேதி கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 31-ந்தேதி ஜெயமங்கலம், குள்ளப்புரம், மேல்மங்கலம் ஆகிய கிராமங்களுக்கும், 1-ந்தேதி கீழவடகரை, வடகரை, தென்கரை ஆகிய கிராமங்களுக்கும், 2-ந்தேதி ஏ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
போடி தாலுகாவில் 26-ந்தேதி ராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி ஆகிய கிராமங்களுக்கும், 31-ந்தேதி போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கும், 1-ந்தேதி டொம்புச்சேரி, கூழையனூர், போடி, மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 2-ந்தேதி கொட்டக்குடி, போடி-வடக்குமலை, அகமலை ஆகிய கிராமங்களுக்கும் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
மனுக்கள் கொடுக்கலாம்
உத்தமபாளையம் தாலுகாவில் 26-ந்தேதி பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 31-ந்தேதி தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 1-ந்தேதி க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு, வடக்கு), கீழக்கூடலூர் (மேற்கு, கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 2-ந்தேதி அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், புலிக்குத்தி, மார்க்கையன்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 3-ந்தேதி வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் (மலை) கிராமங்களுக்கும், 7-ந்தேததி கோம்பை (கிழக்கு, மேற்கு), மல்லிங்காபுரம், உத்தமபாளையம் (தெற்கு, வடக்கு), கோகிலாபுரம், ராயப்பன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.
இந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான தங்களின் அனைத்து குறைகள், கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story