கோடை மழையால் மிளகாய் உற்பத்தி பாதிப்பு
முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கோடை மழையால் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் கோடை மழையால் மிளகாய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மிளகாய் விவசாயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் மிளகாய், பருத்தி விவசாயமும் நடைபெற்று வருகின்றது. அது போல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், தேரிருவேலி, சிக்கல், இதம்பாடல், கடம்போடை, ஆலங்குளம், மல்லல் உள்ளிட்ட பல ஊர்களிலும் மிளகாய் விவசாயம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகா சுற்றிய பல கிராமங்களிலும் கோடை மழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலையும் குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
விலை குறைவு
இதுபற்றி முதுகுளத்தூர் அருகே வடக்கு மல்லல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீதையம்மாள் கூறும்போது:-
இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சீசன் தொடங்கிய ஒரு மாதத்தில் நன்றாக இருந்ததுடன் எதிர்பார்த்த விலையும் கிடைத்தது.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு வரையிலும் மிளகாய் விளைச்சல் நன்றாக இருந்ததுடன் ஒரு கிலோ மிளகாய் ரூ.400 வரை விலை போனது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் செடிகளில் காய்த்த மிளகாயில் ஒருவித பாதிப்பு ஏற்பட்டு விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.400-க்கு விலை போன மிளகாய் கிலோ ரூ.150-க்கு மட்டுமே விற்கப்படுகிறது. விலை குறைந்ததால் நாங்கள் கவலை அடைந்து உள்ளோம். கடந்த ஆண்டும் மிளகாய் விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த ஆண்டும் அதே நிலைமைதான் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story