கால்வாய் அமைக்கும் பணியின் போது தகராறு; 3 பேர் மீது வழக்கு
ஆரணி அருகே கால்வாய் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் 12-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் விஜயா. இவரின் கணவர் சரவணன் (வயது 48), ஆட்டோ டிரைவர். வார்டில் கால்வாய் அமைக்கும் பணியை சரவணன் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அப்பாசாமியின் மகன் விஜயகுமார் (48) என்பவர் கால்வாய் பணியை இப்படி திருத்தி அமையுங்கள் எனக் கூறினார். இதனால் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டனர். தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டு இருவரும் தாக்கிக்கொண்டனர். அதில் படுகாயம் அடைந்த சரவணன், விஜயகுமார் ஆகியோர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சரவணன், அவரின் தம்பி ஆகிய இருவர் மீதும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story