துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தொழிலாளி கைது


துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 May 2022 7:23 PM IST (Updated: 14 May 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,  

சென்னை எழும்பூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 53). இவர், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், குடித்து விட்டு சரிவர வேலை செய்யாமல் இருந்ததால் இவரை துப்புரவு பணி மேலாளர் பாஸ்கர் (31) பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார், நேற்று குடித்துவிட்டு மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த மேலாளர் பாஸ்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பாஸ்கர் தலையில் ஊற்றி உயிருக்கு தீ வைத்து கொளுத்த முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தார்.

Next Story