பாப்பான்குளம் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடை
பாப்பான்குளம் பஞ்சாயத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட பாப்பான்குளம் பஞ்சாயத்து பாட்டத்தெருவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவர் எல்.ஐ.சி. முருகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வழிகாட்டுகுழு உறுப்பினருமான மனோஜ் பாண்டின் எம்.எல்.ஏ. ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
இதில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். வி.முருகேசன், கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடையம் பெரும்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானாவூரில் பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story