நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் 20-ந் தேதி நடக்கிறது


நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் 20-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 14 May 2022 7:48 PM IST (Updated: 14 May 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் 20-ந் தேதி நடக்கிறது

நாமக்கல்:
நாமக்கல் அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதி நடக்கிறது.
அரங்கநாதர் கோவில்
நாமக்கல் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதான நிலையில் காணப்பட்டது. இந்த தேரை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் தேர் புதுப்பிப்பதற்கான பணி தொடங்கியது.
இதில் திருவண்ணாமலையை சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45 மரச்சிற்ப கலைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த தேர் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் அனைத்து முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம் நிகழ்ச்சியை நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்
அதன்படி அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னகொடி, துணை ஆணையர் ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Next Story