தக்காளி விலை கிடுகிடு உயர்வு


தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 14 May 2022 8:07 PM IST (Updated: 14 May 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

திருச்சி, மே.15-
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வழக்கமாக பழனி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் தொடக்கம் வரை ரூ.10-க்கு விற்ற தக்காளி, பருவநிலை மாற்றத்தாலும், வெயிலின் தாக்கத்தாலும் தக்காளி விளைச்சல் குறைந்தது.  இதனால் தக்காளி விலை கடந்த மாத இறுதியில் ரூ.40-ஆக உயர்ந்தது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மேலும் உயர்ந்து ரூ.60-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி விளைச்சல் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்துள்ளது. இதனால் நாட்டுத்தக்காளி வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை குறையாமல் கடந்த வாரங்களில் ரூ.40-ல் இருந்து ரூ.50 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மேலும் வரும் நாட்களில் தொடரும். அதிகரித்து வரும் தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story