குறும்பனையில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் பலி


குறும்பனையில்  கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் பலி
x
தினத்தந்தி 14 May 2022 8:19 PM IST (Updated: 14 May 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

குறும்பனையில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

குளச்சல், 
குறும்பனையில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மீன் பிடிக்க சென்றார்
குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது62), மீனவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவரும் நேற்று குறும்பனை கடலில் கட்டுமர படகில் மீன் பிடிக்க சென்றனர். 
இருவரும் கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் வலையை வீசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு ராட்சத அலை எழுந்து கட்டுமரம் மீது மோதியது. இதில் கட்டுமரம் கவிழ்ந்து இருவரும் கடலில் விழுந்தனர். உடனே, வின்சென்ட் நீந்தி கரை சேர்ந்தார். ஏசுதாசன் நீந்த முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தார். 
பரிதாப சாவு
கரை சேர்ந்த வின்சென்ட் நடந்த சம்பவங்களை உறவினர்களிடம் கூறினார். உடனே, உறவினர்கள் வேறு படகில் விரைந்து சென்று ஏசுதாசனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
பின்னர் அவரை உடையார்விளையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் மரைன் போலீசார், மீனவர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார். 
கடலில் மூழ்கி இறந்த ஏசுதாசுக்கு செல்வி (60) என்ற மனைவியும், 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.

Next Story