இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுகாமூர் ரோடு கே.சி.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் அமரேசன், உடற்பயிற்சி கூட நிறுவனர் ஆவார். இவருக்கும், தச்சூரை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த ரவி மகள் சரண்யா (வயது 24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அமரேசன் கடன் தொல்லையால் மனைவி சரண்யாவிடம், உனது தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வா, எனக்கூறி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், மனவேதனை அடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரண்யாவின் தந்தை ரவி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் சரண்யாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
தற்கொலை செய்து கொண்ட சரண்யாவுக்கு 6 மாதத்தில் அர்ஜுன் என்ற கைக்குழந்தை உள்ளது.
Related Tags :
Next Story