100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்


100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
x
தினத்தந்தி 14 May 2022 8:21 PM IST (Updated: 14 May 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

கடையத்தில் 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.

கடையம்:

கடையம் கால்நடை ஆஸ்பத்திரியில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத் (கீழக்கடையம்), ஜூனத் பர்வீன் (வீராசமுத்திரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகளை வழங்கினார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் தங்கராஜ், டாக்டர் பிரதிபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story