குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது
குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு உணவுப் பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் கிணத்துக்கடவு தாசில்தார் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, இளநிலை வருவாய் ஆய்வாளர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரேசன் அட்டையில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கு தல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், முகவரி, தொலைபேசி எண் மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று கொண்டனர்.
முகாமில் கிணத்துக்கடவு தாலுகா பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட் டது.
அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று கிணத்துக்கடவு குடிமைப்பொருள் வட்ட வழங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story