குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால்களை சமன் செய்யும் பணி
நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்காக நாற்றாங்கால்களை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடிக்காக நாற்றாங்கால்களை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.
விவசாய பணிகள்
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் ேததி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் நடந்து வந்தது. அப்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடந்தது.
1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
கோடை சாகுபடி
இந்த நிலையில் நீடாமங்கலம் தாலுகா பகுதியில் இந்த ஆண்டு 2,500 ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடியை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் மண்ணின் தன்மையை மாற்றுவதற்காக கோடை சாகுபடியை செய்ய வில்லை.
நீடாமங்கலம் அருகே கானூர், அன்னவாசல், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடிக்கு விதை தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் உள்ள வயலில் குறுவை சாகுபடிக்கு விதை விடுவதற்காக பெண் தொழிலாளர்கள் நாற்றங்காலை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story