குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகன பழுதை சரிசெய்ய 5 குழுக்கள் நியமனம்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன பழுதை சரிசெய்ய 5 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன பழுதை சரிசெய்ய 5 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
கோடை சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வரும் போது அவர்களது வாகனங்கள் இந்த சாலையில் பழுது அடை ந்து விட்டால் நடுகாட்டில் அவதியடை யும் நிலை இருந்து வந்தது. வாகனத்தை பழுது பார்க்கும் மெக்கானிக் மேட்டுப்பாளையம் அல்லது குன்னூரிலிருந்து வர வேண்டியது இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
பழுது நீக்கும் முகாம்
இதனை கருத்தில் கொண்டு குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கமும் குன்னூர் காவல் உட்கோட்டமும் இணைந்து கோடை சீசனில் இலவச வாகன பழுது நீக்கும் முகாமை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் முகாம் நடைபெறுகிறது. இந்த நாட்களில் சங்கத்தை சேர்ந்த மெக்கானிக்குகள் பர்லியார் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார்கள்.
5 குழுக்கள் நியமனம்
இந்தநிலையில் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் சங்கத்தின் சார்பில் சுற்றுலா ஓட்டுனர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் நோட்டிஸ் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதற்காக 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு குன்னூர் பஸ் நிலையம், வெலிங்டன், எள்ளநல்லி பர்லியார், மரப்பாலம், காட்டேரி பூங்கா, காட்டேரி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக இலவசமாக செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குன்னூர் சங்கத்தின் தலைவர்ராஜேஷ், பொதுச் செயலாளர் ஹேன்குமார், செயலாளர் பழனி, பொருளாளர் ஜேயேஸ், மாநில மாவட்ட பொறுப்பாளர் சுந்தர், மாநில பிரதிநிதி ராஜ் உள்பட சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story