மூலிகை தோட்டத்தை பேரூராட்சிகளின் ஆணையாளர் ஆய்வு


மூலிகை தோட்டத்தை பேரூராட்சிகளின் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2022 9:00 PM IST (Updated: 14 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் மூலிகை தோட்டத்தை பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

உத்தமபாளையம்:

தமிழ்நாடு பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் நேற்று உத்தமபாளைம் வந்தார். பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கில் அவர் ஆய்வு செய்தார். அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுழற்சி முறையில் உரம் தயாரிப்பதை ஆய்வு மேற்கொண்டார். மேலும் உரக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை பேரூராட்சிகளின் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இதேபோல் பின்னர் பிடி.ஆர். காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை பார்வையிட்டு சாலையின் தன்மையை ஆய்வு செய்தார். பஸ் நிலையப் பகுதிக்கு வந்த ஆணையாளர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். 

பின்னர் அங்குள்ள சுகாதார வளாகத்தில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சியை குப்பை இல்லா நகரமாக மாற்றிடும் வகையில், பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜாராம், செயல் அலுவலர் கணேசன், தலைமை எழுத்தர் ரவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சிகளின் ஆணையாளர் கூறுகையில், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருமானம் உள்ள பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உத்தமபாளையம் பேருராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த பணிகள் நடந்து வருகிறது என்றார்.

Next Story