கூடலூரில் ஒரே இரவில் மலர்ந்து வாடும் நிஷாகந்தி மலர்களை கண்டு ரசித்த பொதுமக்கள்
ஒரே நாள் இரவில் மலர்ந்து வாடிவிடும் நிஷாகந்தி மலர்கள் கூடலூரில் பூத்தது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
கூடலூர்
ஒரே நாள் இரவில் மலர்ந்து வாடிவிடும் நிஷாகந்தி மலர்கள் கூடலூரில் பூத்தது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நிஷாகந்தி மலர்களை ரசித்தனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒவ்வொரு கால நிலைகளுக்கு ஏற்ப தாவரங்கள் வளர்கிறது. 3 மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் கூடலூர், நடுவட்டம், கல்லட்டி, முக்குருத்தி உள்ளிட்ட வனத்தில் பூக்கிறது. இதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலர்களும் பூக்கிறது. ஒரே நாள் இரவில் பூத்து சில மணி நேரத்தில் வாடி விடும் தன்மை உடையது நிஷாகந்தி மலர்கள்.
கூடலூரில் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளில் நிஷாகந்தி மலர் செடிகளை வளர்த்து வருகின்றனர். இதை பிரம்ம கமலம் எனவும் அழைத்து வருகின்றனர். மேல் கூடலூரில் வசிக்கும் ஆசிரியை ஜெபமதி என்பவரது வீட்டில் வளர்த்து வந்த செடிகளில் நிஷாகந்தி பூக்கள் நள்ளிரவில் பூத்தது. தொடர்ந்து சில மணி நேரத்தில் வாடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நிஷாகந்தி மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
ஒரே நாள் இரவில் மலர்ந்து வாடியது
தொடர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நிஷாகந்தி மலர்களில் இருந்து நறுமணம் அப்பகுதி முழுவதும் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நிஷாகந்தி மலர்களை காண்பது அதிர்ஷ்டம் என கருதப்படுகிறது. சங்ககால இலக்கியத்திலும் நிஷாகந்தி மலர்கள் இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து தாவர ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:- நிஷாகந்தி செடிகள் இனத்தைச் சேர்ந்தவை. இதன் தண்டுகளை வெட்டி நடவு செய்தால் வளரக்கூடியது. ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் நட்சத்திர மலர்கள் எனவும், இலங்கையில் அபூர்வ மலராகவும், சீனர்கள் அதிர்ஷ்ட மலராகவும் கருதுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story