முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 18-ந் தேதி சிக்கமகளூரு வருகை
நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 18-ந் தேதி சிக்கமகளூருவுக்கு வருகை தர உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
வளர்ச்சி பணிகள்
சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதுகுறித்த ஆலோசனை கூட்டம் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-
சிக்கமகளூருவில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகிற 18-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகை தர உள்ளார். அப்போது அவர் சிக்கமகளூரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்க உள்ள பசவதத்துவா என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பொதுப்பணித்துறை சார்பில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கட்டப்பட்டுள்ள அரசு விருந்தினர் மாளிகையையும் தொடங்கி வைக்க உள்ளார்.
ரூ.85 கோடி செலவில்...
அரசு சார்பாக பெண்களுக்கான விளையாட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் சிருங்கேரி கலசாவில் உள்ள அம்பேத்கர் பவனுக்கு அடிக்கல் நாட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவற்றை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், சிக்கமகளூரு மாவட்டத்தில் ரூ.85 கோடி செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்து விட்டு அன்று மாலை அவர் மீண்டும் பெங்களூருவுக்கு புறப்படுகிறார்.
எனவே துறை சார்ந்த அதிகாரிகள் வளர்ச்சி பணிகளை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். மேலும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story