வேறு அறையில் அமர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி
திருவாரூர் அருகே தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வு எழுதாமல் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் வேறு அறையில் அமர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதினார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆள் மாறாட்டம் நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:-
திருவாரூர் அருகே தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வு எழுதாமல் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் வேறு அறையில் அமர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதினார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆள் மாறாட்டம் நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இடம் மாறி அமர்ந்து தேர்வெழுதிய மாணவி
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-1 தமிழ் முதல்தாள் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்வு எழுதாமல் தேர்வுக்கு வராத வேறொரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
மாணவி இடம் மாறி அமர்ந்து தேர்வு எழுதியது தொடர்பான விவகாரம் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதனையடுத்து அங்கு தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மலர்க்கொடி என்பவர் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும் பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் தலைமையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பொதுத்தேர்வில் இடம் மாறி மாணவி தேர்வு எழுதிய விவகாரத்தில் ஆள் மாறாட்டம் நடந்ததா? அல்லது தவறுதலாக மாணவி இடம் மாற்றி அமர வைக்கப்பட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story