அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பள்ளி தலைமையாசிரியை  தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 9:19 PM IST (Updated: 14 May 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

காங்கயம்:
காங்கயத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தலைமை ஆசிரியை
திருப்பூர் மாவட்டம் காங்கயம் திருப்பூர் சாலையில் பாரதியார் வீதியில் வசிப்பவர் குணசேகரன் (வயது 38), இவரது மனைவி பானுஸ்ரீ கார்த்திகா (42). இவர் படியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். 
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி குணசேகரன், அவரது மகன் மற்றும் நண்பர்களுடன் திருச்செந்தூருக்கு சென்று விட்டார். வீட்டில் பானுஸ்ரீ கார்த்திகா தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை குணசேகரன் தனது மனைவியுடன் போனில் பேசியதாக தெரிகிறது. அதன் பின்னர் தொடர்ந்து அவரை பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. பின்னர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய குணசேகரன் வீட்டின் காம்பவுண்டு கேட் உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்தார். 
தூக்குப்போட்டு தற்கொலை
சத்தம் போட்டும் பானுஸ்ரீகார்த்திகா வெளியே வராததால் வீட்டின் காம்பவுண்டின் மேல் ஏறி தாண்டி குதித்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கையறையில் பானுஸ்ரீகார்த்திகா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தோர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுஸ்ரீகார்த்திகா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story