விபத்தில் பெண் பலி
விபத்தில் பெண் பலி
எருமப்பட்டி:
திருச்சி மாவட்டம் பகழவாடி நல்லெண்ண பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி லதா (வயது 41). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான போடிநாயக்கன்பட்டியில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக போடிநாயக்கன்பட்டியில் இருந்து அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் மண்டபம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக லதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story