மராட்டியத்தில் புதிதாக 248 பேருக்கு கொரோனா


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 14 May 2022 9:25 PM IST (Updated: 14 May 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 248 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் பலியானார்.

மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 248 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் பலியானார்.
248 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சனிக்கிழமை மாநிலத்தில் புதிதாக 248 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல ஒருவர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்.
 மாநிலத்தில் இதுவரை 78 லட்சத்து 80 ஆயிரத்து 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 லட்சத்து 31 ஆயிரத்து 292 பேர் குணமாகி உள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,439 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்கு இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 854 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மும்பையில் ஒருவர் பலி
 மாநிலத்தில் அதிகபட்சமாக மும்பை, தானே, நவிமும்பை, பன்வெல், கல்யாண் டோம்பிவிலி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மும்பை பெருநகரில் மட்டும் 170 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் மிககுறைந்த அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 மும்பை நகரை  பொறுத்தவரை புதிதாக 131 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.


Next Story