கடன்தொல்லையால் தொழிற்சாலை ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை


கடன்தொல்லையால் தொழிற்சாலை ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 9:36 PM IST (Updated: 14 May 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கடன் தொல்லையால் தொழிற்சாலை ஒப்பந்ததாரர் காப்பு காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி, 

ஆந்திர மாநிலம் சத்யவேடு அடுத்த இருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னை அடுத்த மணலியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 9-ந் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள போந்தவாக்கம் காப்புகாட்டிற்கு சென்றார். அங்கிருந்து தனது நண்பர்களான முனிசேகர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு செல்போனில் பேசினார்.

அப்போது போந்தவாக்கம் காப்பு காட்டில் உள்ள தான், கடன் தொல்லையால் புல்லுக்கு தெளிக்கும் மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிய பாண்டியனை அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story