திம்மநாயக்கன்பாளையத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கையால் ஈக்கள் தொல்லை கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்


திம்மநாயக்கன்பாளையத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கையால் ஈக்கள் தொல்லை கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்
x
தினத்தந்தி 14 May 2022 9:36 PM IST (Updated: 14 May 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

திம்மநாயக்கன்பாளையத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கையால் ஈக்கள் தொல்லை கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்


சுல்தான்பேட்டை

திம்மநாயக்கன்பாளையத்தில் சுகாதாரத்துறை நடவடிக்கையால் ஈக்கள் தொல்லை கட்டுக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

திம்மநாயக்கன்பாளையம்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் திம்மநாயக்கன்பாளையம் உள்ளது. 
இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இங்குள்ள குடியிருப்புகளின் அருகே கோழிப்பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது.

அதை சாப்பிட வந்த 4 நாய்கள் சுருண்டு விழுந்து இறந்தன. அவற்றை அகற்றாததால் துர்நாற்றம் வீசியது. 

மேலும் இறந்து கிடக்கும் கோழிகள் மற்றும் நாய்களின் உடல்கள் சிதைந்து ஈக்கள் மொய்த்தபடி கிடந்தன. 

இதையடுத்து அங்குள்ள வீடுகளுக்குள் ஈக்கள் அதிக எண்ணிக் கையில் படையெடுத்தன. 

இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு ஈக்கள் தொல்லை அதிகரித்தது. 

வீடு களில் உணவுகள், குடிநீர் மற்றும் பாத்திரம் உள்ளிட்ட பொருட் களிலும் ஈக்கள் ஒட்டிக் கொண்டன. 

இதனால் மக்கள் வீட்டில் சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டனர். மேலும் நோய் பரவும் அபாயமும் இருந்தது.

  அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினருக்கு புகார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து சுல்தான் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அதி காரிகள் குழுவினர் திம்மநாயக்கன்பாளையத்தில் ஆய்வு செய்தனர்.

மேலும் அங்குள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் சித்தநாயக்கன் பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்தனர். 

அப்போது, கோழிப்பண்ணையில் கழிவுகளை முறையாக அகற்ற தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

கிருமிநாசினி தெளித்து ஈக்கள் தொல்லை இல்லாமல் பராமரிக்க வேண்டும். 

இல்லை என்றால் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

பொதுமக்கள் நிம்மதி

இதைத்தொடர்ந்து திம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்களை கட்டுப்படுத்த கடந்த 2 வாரத்திற்கு மேலாக சுகாதாரத் துறையி னர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். 

இதன் காரணமாக அங்கு ஈக்கள் தொல்லை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Next Story