மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
கடலூர்
கடலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து முதல் நாளான நேற்று 2 போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகள் அனைத்தும் 25 ஓவர் கொண்டதாகும். மேலும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு பெற்ற கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த போட்டிகள் வருகிற 29-ந் தேதி வரை காலை 8.30 மணி அளவிலும், மதியம் 12.30 மணி அளவிலும் தொடங்கி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story