கச்சிராயப்பாளையம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கச்சிராயப்பாளையம் பகுதி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற வகையில் உணவு தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி, உணவு செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுபோன்று கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி உணவு தயார் செய்யக்கூடாது, அவ்வாறு தயார் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளரை எச்சரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story