‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 May 2022 6:45 PM GMT (Updated: 2022-05-14T22:05:41+05:30)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருவாரூர்:-

ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு ஆலங்குடியை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதனால் இந்த ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களை மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவற்றில் மேல்சிகிச்சைக்கு அழைத்து  சென்று வருகின்றனர். இதனால் சில சமயங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-பொதுமக்கள், ஆலங்குடி.

Next Story