பழனியில் பக்தர்கள் கிரிவலம்
பழனியில் காவடி எடுத்தும், கும்மி அடித்தும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படும். இந்த 14 நாட்களில் பழனி பகுதியை சேர்ந்த பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
பழனி மலையை சுற்றியுள்ள கடம்ப மரங்கள் கோடை காலத்தில் அதிகம் பூக்கும், சுத்தமான காற்று வீசும் என்றும், ஆகவே கழு திருவிழாவின் போது கிரிவலம் வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். அதன்படி, பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்தும் கிரிவலம் வருகின்றனர். இன்று கோவை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் மயில் காவடி எடுத்தும், கும்மி அடித்து ஆடி வந்தனர்.
Related Tags :
Next Story