திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டார்.
திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டார்.
அமைச்சர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆஸ்பத்திரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 2,184 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம், 2-ம் தளங்களில் அமைய உள்ள சிறு அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பிரிவு, நுண்கதிர் பிரிவு, சி.டி.ஸ்கேன், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்பு அறை, மருத்துவ வார்டு, செவிலியர் அறை ஆகியவற்றுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்
அப்போது பொறியாளர்களிடம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வவிநாயகம், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி. கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகரசபை துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story