பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாங்காய் சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் மாங்காய் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் இந்த பகுதியில் உள்ள மாமரங்கள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த மாமரங்களை விவசாயிகள் பராமரித்து வந்தனர்.
பூச்சி தாக்குதல்
தற்போது மரங்களில் துளிர்விட்டு நன்கு வளர்ந்த நிலையில் பூக்கள் பூத்து பிஞ்சு விட தொடங்கி உள்ளன. இதனால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தேன்பூச்சி தாக்குதலால் மாபூக்கள் கருகி வருகின்றன. இதனால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் வளர்ச்சி அடையாமல் மரத்தில் இருந்து கீழே விழுந்து விடுகின்றன. இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் நன்றாக இருக்கும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆலோசனை வழங்க வேண்டும்
மாங்காய் போதிய விளைச்சல் இல்லாத நிலையில் சரியான விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே வேளாண்மை துறையினர் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை பார்வையிட்டு நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story