ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் 12 டன் நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் 12 டன் நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
பொள்ளாச்சி
ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் 12 டன் நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.-
நெல் விதை இருப்பு
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 2 போகம் நெல் சாகுபடி செய்யப்படு கிறது. தற்போது 2-ம் போகம் முடிந்து, முதல் போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயராகி வருகின்றனர். எனவே விவசா யிகளுக்கு வழங்குவதற்கு போதிய நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது
ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் முதல் போக நெல் சாகுபடி விதைப்புக்காக 4 டன் கோ-51 ரகம், 8.8 டன் ஏ.எஸ்.டி. ரக நெல் விதை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
அரசு மானியம் தவிர்த்து கோ-51 கிலோவுக்கு ரூ.18.50, ஏ.எஸ்.டி. ஒரு கிலோ 23-க்கும் வாங்கி கொள்ளலாம். இந்த நெல் விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 90 சதவீதத்திற்கு மேல் முளைப்பு திறன் உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
அதிக மகசூல்
பூச்சி தாக்குதல் குறைந்து விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம். நெல் விதையை நாற்றாங்கால் விட்டு நெல் பயிரை 22.5 செ.மீ. இடைவெளியில் எந்திரம் அல்லது அணி நடவு முறையில் நடவு செய்ய வேண்டும்.
சேறு அதிகமாக இருந்தால் ஒரு குழியில் இரு நாற்றுக்கள் நடவு செய்யலாம்.
இதனால் பயிர்களில் தண்டு அழுகல், புகையான் போன்ற நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம். திருந்திய நெல் சாகுபடி முறையால் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story