காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- மருந்தாளுனர் சங்கம் வலியுறுத்தல்


காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- மருந்தாளுனர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2022 12:30 AM IST (Updated: 14 May 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூரில் நடந்த அரசு மருந்தாளுனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்:-

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூரில் நடந்த அரசு மருந்தாளுனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் ராமநாதகணேசன், மாநில துணைத்தலைவர் பைரவநாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் விஸ்வேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என வரையறுக்க வேண்டும். 385 மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 

பணி நிரந்தரம்

தொகுப்பூதிய முறை மருந்தாளுனர்கள் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும். மருந்தாளுனர்களுக்கான மாற்று பணியினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணை செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

Next Story