போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் ஊராட்சி தலைவி தர்ணா
போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் ஊராட்சி தலைவி தர்ணாவில் ஈடுபட்டார்.
மத்தூர்:
போச்சம்பள்ளியை அடுத்த ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி தலைவியாக இருப்பவர் லட்சுமி (வயது 32). கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சிக்கு உட்பட்ட பந்திரஅள்ளி காலனிக்கு அருகில் உளள அரசு புறம்போக்கு நிலத்தை அந்த பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்காக ஒதுக்கி தருமாறு பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி தலைவி, நேற்று முன்தினம் மாலை போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். அங்கு தரையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த தாசில்தார் இளங்கோ, உரிய நடவடிக்கை எடுத்து இடம் ஒதுக்கி தருவதாக கூறினார். இதையடுத்து ஊராட்சி தலைவி தனது போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
Related Tags :
Next Story