ெரயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு


ெரயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் காந்தி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2022 10:54 PM IST (Updated: 14 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் காந்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் காந்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ெரயில்வே மேம்பாலம்

ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை பகுதியிலிருந்து காரைக்கூட்ரோடு செல்லும் எம்.பி.டி சாலை எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில், நவல்பூர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. மிகவும் பழமையான மேம்பாலமாக இது உள்ளது.
இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் காந்தி கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் ரூ.26 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் மூலமாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 25 சதவீத பணிகள் நிறைவுற்று உள்ளது. 26 மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு முடிவுற்று உள்ளது. 

இதன்மீது சாலை கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதிக்குள் முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் காந்தி ஆய்வு
இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைக்க, நவல்பூர் சி.எஸ்.ஐ. சர்ச் சுற்றுசுவர் பகுதியில் சுமார் 1,427 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. அதனை கையகப்படுத்திட, இடத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார். இந்த இடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட நடவடிக்கை எடுக்க சர்ச் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுவிடும், ஆகவே இதன் மீது தனி கவனம் செலுத்தி அனுமதி பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டார். 

எஞ்சியுள்ள பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.

ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story