பாலக்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்


பாலக்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 14 May 2022 10:55 PM IST (Updated: 14 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பாலக்கோடு:
பாலக்கோடு பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தீவிர துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் முரளி தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, பொது பணித்துறை அலுவலகம், தாசில்தார் அலுவலகம், தக்காளி மண்டி வரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது அவர்கள் குப்பை இல்லா நகரம் உருவாக்குவோம் என்ற கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Next Story