காகிதங்கள் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அச்சகங்கள் அடைப்பு
காகிதங்கள் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அச்சகங்கள் அடைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் காகிதங்கள் விலை உயர்வை கண்டித்து அச்சகங்கள் ஒரு நாள் அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் குறித்து சங்க தலைவர் மாது, செயலாளர் குப்புசாமி ஆகியோர் கூறுகையில், அச்சடிக்கும் காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதே போல் ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றப்பட்டதை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அச்சகங்கள் ஒரு நாள் அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள், டிசைனிங் சென்டர்கள் அடைக்கப்பட்டன. போராட்டம் காரணமாக ரூ.8 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டது, என்றனர்.
Related Tags :
Next Story