சூளகிரி பகுதியில் 50 டன் வெங்காயம் அழுகி நாசம்


சூளகிரி பகுதியில் 50 டன் வெங்காயம் அழுகி நாசம்
x
தினத்தந்தி 14 May 2022 10:55 PM IST (Updated: 14 May 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் 50 டன் வெங்காயம் அழுகி நாசமானது.

சூளகிரி:
சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் சென்னை, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெங்காய ஆர்டர்கள் வரவில்லை. இதனால் சுமார் 70 டன் வெங்காயத்தை விவசாயிகள் பட்டியடித்து இருப்பில் வைத்திருந்தனர். மேலும் பாதுகாப்புக்காக தார்பாய் போட்டு மூடி வைத்திருந்தனர். இந்தநிலையில் சூளகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், இருப்பில் வைக்கப்பட்ட 70 டன் வெங்காயம் தண்ணீரில் நனைந்தது. இதனால் சுமார் 50 டன் அளவிலான வெங்காயம் அழுகி நாசமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வராததாலும், மழையில் நனைந்து வெங்காயம் நாசமாகியதாலும் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Next Story