தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 May 2022 11:02 PM IST (Updated: 14 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி மக்கள் அவதி 
திருச்சி மாவட்டம் , பனையக்குறிச்சி கிராமத்தில் பால்பண்ணையில் இருந்து காவிரி செல்லும் மத்தியில் ஏ.ஆர்.கே.நகர் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பனையக்குறிச்சி, திருச்சி. 
ஆபத்தான மின்கம்பம் 
திருச்சி திருவானைக்காவல் நரியன் தெரு பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து மின்கம்பத்தின் நடுவே பாதி உடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுப்புராமன், திருவானைக்காவல், திருச்சி.
நோயாளிகள் அவதி 
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை நாளன்று அதற்குரிய மருத்துவர் பணி நேரத்திற்கு வருவதில்லை. காலை 10 மணிக்கு மருத்துவர் வந்து விடுவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறி பரிசோதனைக்கு வந்திருந்த கர்ப்பிணிகளை காத்திருக்க வைக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வருவது இல்லை. இதனால் இப்பகுதி நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நவல்பட்டு, திருச்சி. 

Next Story