சவுமிய நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் மழையால் நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழா தேரோட்டம் மழையால் நேற்று மாலையில் நிறுத்தப்பட்டது. இன்று காலையில் மீண்டும் நடக்க இருக்கிறது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழா தேரோட்டம் மழையால் நேற்று மாலையில் நிறுத்தப்பட்டது. இன்று காலையில் மீண்டும் நடக்க இருக்கிறது.
தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில். நேற்று காலை தேரில் பெருமாள் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது.
மழை
தேர் சிறிது தூரம் நகர்ந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் காத்திருந்தும் மழை நிற்காததால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டம் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில் “இதுபோன்ற நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த நிகழ்வும் நடைபெறாமல் இருந்த சூழ்நிலையில் தற்போது பக்தர்கள் அதிக அளவில் ேதரோட்டத்தில் கலந்து கொண்டனர். மழையால் தேரோட்டம் சற்று தடைபட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் மறுநாள் (இன்று) காலையில் விமரிசையாக தேரோட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
Related Tags :
Next Story