பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்


பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 14 May 2022 11:10 PM IST (Updated: 14 May 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான முகாம் நேற்று காலை முதல் மதியம் வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்தது. தூத்துக்குடியில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் டு.வி. புரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை தலைமையில் நடந்தது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், புகைப்பட மாற்றம், கைபேசி எண் மாற்றம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 343 பேர் மனு அளித்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு முகாமிலேயே 312 பேர் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 31 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

Next Story