இலுப்பூர் அருகே திருநல்லூர் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா
இலுப்பூர் அருகே திருநல்லூர் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
அன்னவாசல்:
மீன்பிடி திருவிழா
இலுப்பூர் அருகே திருநல்லூர் பெரியகுளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து அமோக விளைச்சல் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுதல். இந்தநிலையில் குளத்தில் நீர் வற்றி குறைந்தவுடன் குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராம மக்கள் சேர்ந்து திருவிழாவாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.
இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருந்த திரளான பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலை என அவற்றை கண்மாயில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடித்தனர்.
சமைத்து சாப்பிட்டனர்
பின்னர் தங்களுக்கு கிடைத்த கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் சாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும்.
Related Tags :
Next Story